Sreesanth will continue to hang over the lifetime orep BCCI was also
சூதாட்ட விவகாரத்தில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட ஸ்ரீசாந்த தடையை தளர்த்துமாறு முன்வைத்த கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐ, ஸ்ரீசாந்த மீதான வாழ்நாள் தடை தொடரும் என்று திட்டவட்டமாக கூறியது.
2013-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களாக இருந்த ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள் என குற்றம் சாட்டப்பட்டது.
அதுதொடர்பான விசாரணையின் இறுதியில் அவர்கள் இருவருக்கும் வாழ்நாள் தடை விதித்து பிசிசிஐ நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நிலையில், தன் மீதான வாழ்நாள் தடையை நீக்கக் கோரி பிசிசிஐ நிர்வாகக் குழுவிடம் ஸ்ரீசாந்த் மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார். எனினும், பிசிசிஐ அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
இதுகுறித்து, பிசிசிஐ வட்டாரங்கள் கூறியது:
“வாழ்நாள் தடையை நீக்கக் கோரி ஸ்ரீசாந்த் தாக்கல் செய்த மறுஆய்வு மனு நிராகரிக்கப்பட்டது. அது தொடர்பான, பிசிசிஐ தலைவர் ராகுல் ஜோரியின் கடிதம் ஸ்ரீசாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் மீதான வாழ்நாள் தடை தொடரும் என்றும், எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் அவர் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கேரள மாநில நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவுக்கு எங்களது வழக்குரைஞர் சட்டரீதியாக பதிலளிப்பார் என்று அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
