Spanish Open tennis Indian player sathyan won golden medal

ஸ்பானிஷ் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ஜி.சத்தியன் தங்கப் பதக்கம் வென்றார்.

ஸ்பானிஷ் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது. இதன் இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் 9-வது இடத்தில் இருந்த இந்தியான் ஜி.சத்தியன், போட்டித் தரவரிசையில் 11-வது இடத்தில் இருந்த ஜப்பானின் கஸுஹிரோ யோஷிமுராவை எதிர்கொண்டார்.

இதில், 11-7, 3-11, 11-6, 6-11, 13-11, 11-7 என்ற செட் கணக்கில் கஸுஹிரோ யோஷிமுராவை வீழ்த்தி வாகை சூடினார் சத்தியன்.

இது, சத்தியன் வெல்லும் 2-வது முக்கியமான பட்டமாகும். முன்னதாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெல்ஜியம் ஓபனில் அவர் பட்டம் வென்றிருந்தார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனிகா பத்ரா - மெளமா தாஸ் இனை போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தென் கொரியாவின் ஜிஹீ ஜியோன்-ஹேன் யாங் இணையிடம் மோதியது.

இதில், 11-9, 6-11, 11-9, 9-11, 9-11 என்ற செட் கணக்கில் தென் கொரிய இணையிடம் வீழ்ந்ததால் இந்திய இணைக்கு வெள்ளிப் பதக்கம் கிட்டியது.