Spain - India collapse match draw How many draws did you draw?
ஸ்பெயின் - இந்திய மகளிர் அணிகள் இடையிலான 2-வது ஹாக்கி டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்தது.
இலண்டனில் நடக்கவுள்ள உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டிக்கு தயாராகும் வகையில் ஸ்பெயின் அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் மோதுகிறது.
முதல் ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியுற்றது. இதற்கிடையே ஸ்பெயின் - இந்திய மகளிர் அணிகள் இடையிலான 2-வது ஹாக்கி டெஸ்ட் போட்டி மாட்ரிட் நகரில் நேற்று நடைபெற்றது.
இதில் இந்திய மகளிர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தினாலும், பின்னர் இந்திய வீராங்கனைகள் அதிரடியாக ஆடினர்.
14-வது நிமிடத்தில் ஸ்பெயினின் பெர்டா போனஸ்ட்ரே கோலடித்து முன்னிலை பெறச் செய்தார். பின்னர் 54-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை அனுபா பதில் கோலடித்தார்.
பின்னர் இரண்டு அணியினரும் கோலடிக்க முயன்றும் முடியாததால் சமனில் முடிந்தது.
