South Korea won the first edition of the Sudirman Cup championship in the last 14 years.

சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் சீனாவை துவம்சம் செய்து வாகைச் சூடி தென் கொரியா கர்சித்ததன் மூலம் கடந்த 14 ஆண்டுகளில் முதல் முறையாக சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் தென் கொரியா சாம்பியன் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்று நேற்று நடைபெற்றது.

இதன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சீனாவின் ஹீ பிங்ஜியாவுடன் மோதிய தென் கொரியாவின் சங் ஜி ஹியுன் 21-12, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

இதேபோல, மகளிர் இரட்டையர் பிரிவிலும் தென் கொரியாவின் சாங் யே நா - லீ சோ ஹீ இணையுடன் மோதி 21-19, 21-13 என்ற செட் கணக்கில் சீனாவின் சென் கிங்சென் - ஜியா யிஃபான் இணையை வீழ்த்தி அசத்தியது.

இதனிடையே, ஆடவர் இரட்டையர் பிரிவில் சீனாவின் ஃபு ஹாய்ஃபெங் - ஸாங் நான் இணை 21-14, 21-15 என்ற செட் கணக்கிலும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதே நாட்டவரும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான சென் லாங் 21-10, 21-10 என்ற செட் கணக்கிலும் வெற்றிப் பெற்றனர்.

அதேபோன்று கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் தென் கொரியாவின் சோய் சோல் கியு - சே யூ ஜங் இணை 21-17, 21-13 என்ற செட் கணக்கில் துவம்சம் செய்து வாகை சூடியது.