இலங்கைக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 384 ஓட்டங்கள் எடுத்தது.

தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கிய டி காக்-ஆம்லா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 26.3 ஓவர்களில் 187 ஓட்டங்கள் குவித்தது.

டி காக் 87 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 109 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த டூபிளெஸ்ஸிஸ் 41, கேப்டன் டிவில்லியர்ஸ் 14, டுமினி 10 ஓட்டங்களில் வெளியேற, ஆம்லா 134 பந்துகளில் 5 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 154 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்வரிசையில் பெஹார்டியன் 20 பந்துகளில் 32 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 384 ஓட்டங்கள் குவித்தது தென் ஆப்பிரிக்கா.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 350 ஓட்டங்கக்கு மேல் குவிப்பது இது 24-ஆவது முறையாகும்.

இதன்மூலம் அதிக முறை 350 ஓட்டங்கக்கு மேல் குவித்த அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இலங்கைத் தரப்பில் சுரங்கா லக்மல் 3 விக்கெட்டுகளையும், மதுசங்கா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.