south africa opt to bowl first in fifth odi
இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடரை தீர்மானிக்கும் முக்கியமான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-1 என இந்தியா முன்னிலை வகிக்கிறது. தொடரை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி இன்று போர்ட் எலிசபெத்தில் நடக்கிறது.
இதுவரை தென்னாப்பிரிக்காவில் எந்த தொடரையும் வெல்லாத இந்திய அணி, முதன்முறையாக இந்த தொடரை வென்றே தீர வேண்டும் என்ற உறுதியில் உள்ளது.
அதே நேரத்தில் தொடரை இந்தியாவிடம் இழந்துவிடக்கூடாது என்ற முனைப்பில் தென்னாப்பிரிக்கா உள்ளது. இப்படியாக இரு அணிகளுக்கும் மிக முக்கியமான இந்த போட்டியில் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது தென்னாப்பிரிக்க அணி.

இந்த போட்டியிலும் மழை குறுக்கிடலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அப்படி மழை குறுக்கிட்டால் இரண்டாவது பேட்டிங் செய்வதுதான் சிறந்ததாக அமையும். அதுமட்டுமல்லாமல், சேஸிங் மாஸ்டர் என வர்ணிக்கப்படும் கோலி, இலக்கை விரட்டுவதில் வல்லவர். எனவே முதலில் பேட்டிங் செய்தால், வெற்றி வாய்ப்பை கோலி பறித்துவிடுவார் என்ற பயத்திலும் மழை குறுக்கிடலாம் என்பதாலும் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது தென்னாப்பிரிக்கா.
