இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா தனது 2-ஆவது இன்னிங்ஸில் 80 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ஓட்டங்கள் குவித்துள்ளது.

ஒட்டு மொத்தமாக 432 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 98.5 ஓவர்களில் 286 ஓட்டங்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டுமினி 63 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கைத் தரப்பில் சுரங்கா லக்மல் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய இலங்கை அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 57 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 3-ஆவது நாளான புதன்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணி 64.5 ஓவர்களில் 205 ஓட்டங்களுக்கு சுருண்டது. தென் ஆப்பிரிக்கத் தரப்பில் பிலாண்டர் 5 விக்கெட்டுகளையும், கைல் அபாட் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 81 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் ஸ்டீபன் குக் 117 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். டீன் எல்கர் 52, ஆம்லா 48 ஓட்டங்கள் எடுத்தனர். 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 80 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ஓட்டங்கள் எடுத்துள்ளது. டூபிளெஸ்ஸிஸ் 41, டி காக் 42 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.

இலங்கைத் தரப்பில் டி சில்வா 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.