South Africa defeated India in the third match

மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 ஆட்டம் ஜோஹன்னஸ்பர்க்கில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 17.5 ஓவர்களில் 133 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் எடுத்து வென்றது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா, இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை சொற்ப ஓட்டங்களில் வீழ, கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் மட்டும் அதிகபட்சமாக 48 ஓட்டங்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் ஷப்னிம் இஸ்மாயில் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் சுனே லஸ் அதிகபட்சமாக 41 ஓட்டங்கள் எடுத்தார். நாடின் டி கிளெர்க் 5 ஓட்டங்கள், மாஸிஸானே காப் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினர்.

இந்திய தரப்பில் பூஜா வஸ்த்ரகர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தென் ஆப்பிரிக்காவின் ஷப்னிம் இஸ்மாயில் ஆட்டநாயகி விருதை வென்றார்.

இதனையடுத்து மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்கா முதல் வெற்றியை பதிவு செய்து 1-2 என்ற கணக்கில் இந்தியாவை பின்தொடர்கிறது.