Asianet News TamilAsianet News Tamil

எனக்கும் டாஸுக்கும் ராசியே இல்ல.. டுபிளெசிஸ் செய்த சுவாரஸ்ய சம்பவம்!! கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் முதன்முறை

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ், கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஒரு நிகழ்வை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். 
 

south africa captain du plessis set duminy as a coin specialist
Author
South Africa, First Published Oct 15, 2018, 5:33 PM IST

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ், கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஒரு நிகழ்வை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். 

ஜிம்பாப்வே அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இதில் ஒருநாள் தொடரை 3-0 என வென்ற தென்னாப்பிரிக்க அணி, டி20 தொடரை 2-0 என வென்றது. மழை காரணமாக ஒரு டி20 போட்டி ரத்து செய்யப்பட்டது. 

இந்த தொடரில் தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை செய்தார். பொதுவாக எந்த நாட்டில் கிரிக்கெட் தொடர் நடக்கிறதோ அந்த அணியின் கேப்டன் டாஸ் சுண்ட, எதிரணி கேப்டன் டாஸ் கேட்பதுதான் வழக்கம். 

south africa captain du plessis set duminy as a coin specialist

போட்டி நடுவரின் முன்னிலையில், டாஸ் போடப்படும். இந்நிலையில், தொடர்ச்சியாக டாஸ் தோற்றுக்கொண்டே இருந்த தென்னாப்பிரிக்கா கேப்டன் டுபிளெசிஸ், முதல் டி20 போட்டிக்கு, அணியில் ஆடாத ஜேபி டுமினியை டாஸ் போடவைத்தார். தான் டாஸ் போட்டால் தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருப்பதால், டுமினியை போடவைத்தார். டுபிளெசிஸின் முயற்சிக்கு வெற்றியும் கிடைத்தது. அந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தான் டாஸ் வென்றது. 

கிரிக்கெட் வரலாற்றில் அணியில் இல்லாத வீரரை வைத்து டாஸ் போட வைத்தது இதுதான் முதன்முறை. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios