இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது 2-ஆவது இன்னிங்ஸில் 51.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

முன்னதாக முதல் இன்னிங்ஸில் 116 ஓவர்களில் 392 ஓட்டங்கள் எடுத்தது அந்த அணி. பின்னர் ஆடிய இலங்கை, தனது முதல் இன்னிங்ஸில் 43 ஓவர்களில் 110 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா 224 ஓட்டங்களில் டிக்ளேர் செய்ய, 507 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது இலங்கை.

3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்களை அந்த அணி எட்டியுள்ளது.

கேப்டன் மேத்தியூஸ் 29, சண்டிமல் 28 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.