Asianet News TamilAsianet News Tamil

தென்னாப்பிரிக்காவிடம் மரண அடி வாங்கிய இந்தியா ஏ!!

தென்னாப்பிரிக்கா ஏ அணியிடம் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா ஏ அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

south africa a team defeats india a in quadrangular series
Author
India, First Published Aug 27, 2018, 6:15 PM IST

இந்தியா ஏ, இந்தியா பி, ஆஸ்திரேலியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ ஆகிய நான்கு அணிகள் கலந்துகொண்டு ஆடும் ஒருநாள் தொடர் இந்தியாவில் நடந்துவருகிறது.

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா ஏ, மனீஷ் பாண்டே தலைமையிலான இந்தியா பி, ஆஸ்திரேலியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ ஆகிய நான்கு அணிகளும் மோதிவருகின்றன. இதில், இன்று இந்தியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா ஏ அணி பவுலிங் தேர்வு செய்ததை அடுத்து இந்தியா ஏ அணி பேட்டிங் ஆடியது. ஏ அணியின் தொடக்க வீரர்கள் சூர்யகுமார் யாதவ் 5 ரன்களிலும் அபிமன்யூ ஈஸ்வரன் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாகினர். இவர்களை அடுத்து ஷ்ரேயாஸ் ஐயர்(7), அம்பாதி ராயுடு(11), குருணல் பாண்டியா(5) மற்றும் நிதிஷ் ராணா(19) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். 

south africa a team defeats india a in quadrangular series

இதையடுத்து ஏ அணி 76 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. சஞ்சு சாம்சனும் தீபக் சாஹரும் இணைந்து அணியை மீட்டெடுக்க முயன்றனர். எனினும் இந்த ஜோடியும் நீடிக்கவில்லை. தீபக் சாஹர் 38 ரன்களிலும் சாம்சன் 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து இந்திய ஏ அணி 37.3 ஓவர்களுக்கே அனைத்து விக்கெட்டையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

158 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா ஏ அணியின் தொடக்க வீரர் குளோயெட் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து அந்த அணியின் மூன்றாம் வரிசை வீரர் எர்வீ  20 ரன்களுக்கும், அவரை அடுத்து அந்த அணியின் கேப்டன் ஜொண்டோ 5 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பிறகு 47 ரன்கள் எடுத்து, மற்றொரு தொடக்க வீரர் மாலனும் அவுட்டானார். அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்தது. எனினும் எளிய இலக்கு என்பதால், 37.4வது ஓவரில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அம்பாதி ராயுடு, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், நிதிஷ் ராணா, சஞ்சு சாம்சன், குருணல் பாண்டியா என நல்ல பேட்டிங் வரிசையை கொண்டிருந்தும் கூட இந்திய ஏ அணி 157 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. மிகக்குறைந்த இலக்கை நிர்ணயித்ததால்தான் இந்த போட்டியில் தோல்வியடைந்தது.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios