Sorry for the completion of commonwealth completion -
காமல்வெல்த் போட்டியின் நிறைவு விழா உற்சாகமற்ற நிலையில் நடந்தததால் கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு தலைவர் பீட்டர் பீட்டி வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கிய காமன்வெல்த் போட்டிகளின் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எனினும் விழா எந்த உற்சாகமுமின்றி சோர்வுடன் நடைபெற்றது என்றும், விழா தொடங்கும் முன்னரே வீரர்கள் அரங்கில் நுழைந்து விட்டனர் என்றும் அணிவகுத்துச் சென்ற வீரர்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவில்லை என்றும் சர்ச்சை எழுந்து.
இந்த நிலையில் காமன்வெல்த போட்டி அமைப்புக் குழுத் தலைவர் பீட்டர் தனது டிவிட்டரில் பதிவு ஒன்றை போட்டார்.
அதில், "நிறைவு விழா நாங்கள் எதிர்பார்த்தவாறு அமையவில்லை, வீரர்களும் போட்டியின் அங்கம் என்பதால் அவர்களை அனுமதித்தோம். மேலும், விழாவில் அதிகம் பேர் பேசி உள்ளனர். இதற்காக நான் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
