மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் பெலாரஸின் விக்டோரியா அசரென்கா, அமெரிக்காவின் சொலானே ஸ்டீபன்ஸ் மோத இருக்கின்றனர்.

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை, அமெரிக்காவின் சொலானே எதிர் கொண்டார். 

இதில் அதிரடியாக விளையாடிய சொலானே 6-1, 6-2 என்ற செட் கணக்கில் கெர்பரை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 

மற்றொரு காலிறுதியில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீராங்கனையான விக்டோரியா அசரென்கா, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்கொண்டார். 

இந்த போட்டியில் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் அசரென்கா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதியில் அமெரிக்காவின் சொலானே மற்றும் விக்டோரியா அசரென்கா மோதவுள்ளனர்.