ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் தமிழக வீரர் அபினவ் முகுந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
கோலி தலைமையிலான இந்த அணியில், தமிழக வீரர் அபினவ் முகுந்த் சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர், தொடக்க ஆட்டக்காரருக்கு மாற்று வீரராக களமிறக்கப்படலாம்.
முன்னதாக, கடந்த 2011-ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்திய அணியில் முகுந்த் இடம் பிடித்திருந்தார்.
சமீபத்தில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணிக்காக சுமார் 700 ஓட்டங்கள் விளாசியுள்ளார். அவரோடு, பார்த்திவ் படேலுக்குப் பதிலாக ரித்திமான் சாஹா தேர்வாகியுள்ளார்.
அணியில் வேறு வீரர்கள் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படாத நிலையில், ரஹானே, ஹர்திக் பாண்டியா ஆகியோர் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளனர்.
அணி விவரம்:
கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், முரளி விஜய், சேத்தேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, கருண் நாயர், ஹர்திக் பாண்டியா, ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், அபினவ் முகுந்த்.
