சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மீண்டும் முன்னேற்றம் கண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஐந்தாவது இடத்தில் இருந்த சிந்து, சிங்கப்பூர் ஓபனில் காலிறுதி வரை முன்னேறியதன் மூலம் தரவரிசையில் இரு இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார்.

மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நெவால் ஓரு இடம் முன்னேற்றம் அடைந்து எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆடவர் ஒற்றையர் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் எட்டு இடங்கள் முன்னேறி 21-வது இடமும், மற்றும் சாய் பிரணீத் எட்டு இடங்கள் முன்னேறி 22-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்திய வீரர்களில் அதிகபட்சமாக அஜய் ஜெயராம் 13-ஆவது இடத்தில் இருக்கிறார்.