சீனாவின் புஸ்ஹாவோ நகரில் நடந்து வரும் சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அபாரமாக முன்னேறினார்.

சீனாவின் புல்ஹாவோ நகரில் சீன ஓபன் பாட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் கொரியாவின் சன் ஜி யுங்கை எதிர்த்து மோதினார் பி.வி.சிந்து.

பரபரப்பாக 89 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் கொரிய வீராங்கனை சன் ஜி யுங்கை 11-22, 23-21, 21-19 என்ற நேர் செட்களில் போராடி வீழ்த்தினா பி.வி.சிந்து.

நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில், சீன வீராங்கனை சன் யுவை எதிர்கொள்கிறார் பி.வி.சிந்து.