Silver and bronze medals for India
ஆசிய இளையோர் மற்றும் ஜூனியர் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் ஜெரேமி லால்ரின்னுகா தலா ஒரு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.
ஆசிய இளையோர் மற்றும் ஜூனியர் பளுதூக்குதல் போட்டி உஸ்பெகிஸ்தானில் நடைபெறுகிறது.
உகென்ஜ் நகரில் நடைபெறும் ஆசிய போட்டிகளின் இளையோர் பிரிவில் மொத்தம் 250 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும், ஜூனியர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் ஜெரேமி வென்று அசத்தியுள்ளார்.
மேலும், அவர் இரண்டு புதிய தேசிய சாதனைகளையும் படைத்து இந்தியாவை சிறப்பித்துள்ளார்.
மற்றொரு வீரரான சிதந்த் கோகோய் சிறுவர் பிரிவில் வெண்கலம் வென்றார். மேலும் மகளிர் பிரிவில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
