Asianet News TamilAsianet News Tamil

வந்ததும் சென்ற ரோஹித்.. ஆஸ்திரேலியாவை வச்சு செஞ்ச தவான்

174  ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 7 ரன்களில் வெளியேற, தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான், அரைசதம் விளாசினார்.
 

shikhar dhawan playing well and hits half century
Author
Australia, First Published Nov 21, 2018, 4:51 PM IST

174  ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 7 ரன்களில் வெளியேற, தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான், அரைசதம் விளாசினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

தொடக்க வீரர் டார்ஷி ஷார்ட் 7 ரன்களில் கலீல் அகமதுவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். ஃபின்ச் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி சிக்ஸர்களாக விளாசிய கிறிஸ் லின்னை 37 ரன்களில் வீழ்த்தினார் குல்தீப் யாதவ். அதன்பிறகு அவர் விட்டுச்சென்ற பணியை செவ்வனே தொடர்ந்தார் மேக்ஸ்வெல். மேக்ஸ்வெல்லும் மார்கஸ் ஸ்டோய்னிஸும் அடித்து ஆடி ரன்களை குவித்து கொண்டிருந்த நிலையில், அந்த அணி 16.1 ஓவருக்கு 153 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. சிறிது நேரம் கழித்து மழை நின்றதும் ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடங்கியது. எஞ்சிய 5 பந்துகளில் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை இழந்து அந்த அணி வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 17 ஓவர் முடிவில் அந்த அணி 158 ரன்களை எடுத்தது. இதையடுத்து டி.எல்.எஸ் முறைப்படி இந்திய அணி 17 ஓவரில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

174 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா வழக்கம்போல நிதானமாக தொடங்க, தவான் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக அடித்து ஆடினார். ரோஹித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழக்க, தவான் அதிரடியை தொடர்ந்தார். பவுண்டரிகளாக விளாசி அரைசதம் கடந்த தவான், தொடர்ந்து அடித்து ஆடிவருகிறார். இதற்கிடையே ராகுல் வெறும் 13 ரன்களில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். இதையடுத்து தவானுடன் ஜோடி சேர்ந்த கோலி வெறும் 4 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து 42 ரன்னில் 72 ரன்கள் விளாசிய தவானும் ஸ்டேன்லேக்கின் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரிஷப் பண்ட்டும் தினேஷ் கார்த்திக்கும் ஜோடி இலக்கை விரட்டி வருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios