- Home
- Sports
- Sports Cricket
- IND vs NZ: அதிரடி வீரர் கணித்தபடியே 2வது ஓடிஐயில் சொதப்பிய ரோகித், விராட் கோலி.. யார் சாமி இவரு!
IND vs NZ: அதிரடி வீரர் கணித்தபடியே 2வது ஓடிஐயில் சொதப்பிய ரோகித், விராட் கோலி.. யார் சாமி இவரு!
IND vs NZ ODI: நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி 29 பந்தில் 23 ரன்கள் எடுத்து போல்டாகி ஏமாற்றம் அளித்தார். இதேபோல் ஹிட்மேன் ரோகித் சர்மாவும் 38 பந்தில் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இந்தியா, நியூசிலாந்து 2வது ஓடிஐ
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி குஜராத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 284 ரன்கள் எடுத்துள்ளது.
சூப்பர் சதம் விளாசிய கே.எல்.ராகுல் 92 பந்துகளில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் 112 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் சுப்மன் கில் அரை சதம் (53 பந்தில் 56 ரன்கள்) அடித்தார்.
ரோகித் சர்மா, விராட் கோலி விரைவில் அவுட்
அதே வேளையில் முதல் போட்டியில் சதத்தை நெருங்கி அவுட்டான கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி 29 பந்தில் 23 ரன்கள் எடுத்து போல்டாகி ஏமாற்றம் அளித்தார். இதேபோல் ஹிட்மேன் ரோகித் சர்மாவும் 38 பந்தில் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். இவர்கள் இருவரது ஆட்டத்தையும் நேரில் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
முன்பே கணித்த அதிரடி வீரர்
இது ஒருபுறம் இருக்க, 2வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் சொற்ப ரன்களில் அவுட் ஆவார்கள் என்று நியூசிலாந்து பேட்டர் அதிரடி வீரர் நிக் கெல்லி போட்டிக்கு முன்பாக கூறியிருந்தார். அவர் கூறியபடியே ரோகித்தும், கோலியும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது போட்டிக்கு முன்பாக பேசிய நிக் கெல்லி, ''ரோகித் சர்மாவும், விராட் கோலியும் 2வது போட்டியில் அதிக ரன்கள் எடுக்க மாட்டார்கள் என நம்புகிறேன். இருவரும் விரைவில் அவுட் ஆவார்கள்'' என்று கூறியிருந்தார்.
நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?
நிக் கெல்லி கூறியபடியே ரோகித்தும், கோலியும் 30 ரன்களை கூட தொட முடியாமல் அவுட் ஆகியுள்ளனர். இதேபோல் '2வது போட்டியில் நாங்கள் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்வோம்' எனவும் நிக் கெல்லி கூறியிருந்தார். அவர் சொன்ன இந்த கணிப்பும் பலிக்குமா? நியூசிலாந்து அணி 285 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

