Shikhar Dhawan Kane Williamsons Record Stand Takes SunRisers Hyderabad Into Playoffs Delhi Daredevils Eliminated

ஐபிஎல்லின் நேற்றைய 42ஆவது போட்டியில் ஹைதராபாத் அணி பேட்டிங்கிலும் தாறுமாறாக அசத்திய ஹைதராபாத் அணி மெகா வெற்றியை கைப்பற்றி முதல் ஆளாக ப்ளே ஆஃபுக்கு முன்னேறியுள்ளது.

ஹைதராபாத் அணியில் விருத்திமான் சாஹாவுக்கு பதில் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி இடம்பிடித்திருந்தார். டெல்லி அணியில் ஷாபாஸ் நதீம், ஜேசன் ராய், ஹர்ஷல் படேல் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பிரித்வி ஷா மற்றும் ஜேசன் ராயைத் தொடக்க ஆட்டக்காரர்களாகக் கொண்டு களமிறங்கிய டெல்லி அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. 4 ஓவர்களில் 21 ரன்களைச் சேர்த்து இருவரும் (பிரித்வி- 9, ராய்- 11) ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் பொறுப்பை உணர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் ஆடி சதமடித்தார். 63 பந்துகளை எதிர்கொண்ட அவர் 128 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது ஆட்டத்தால் டெல்லி அணி 187 ரன்கள் குவித்தது.

188 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு 2ஆவது ஓவரிலேயே 14 ரன்களில் அலெக்ஸ் ஹேல்ஸ் வெளியேறினார். பின்னர் வந்த ஷிகர் தவன் - கேன் வில்லியம்சன் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இவர்களது ஆட்டம் ஹைதராபாத் அணியின் பேட்டிங் பற்றிய விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்தது. இருவரும் அரை சதம் கடந்தனர். வாண வேடிக்கைகளில் கவனம் செலுத்தாத கேன் வில்லியம்சனின் இன்னிங்ஸ் சிறப்பாக இருந்தது.

இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். தவன் 92 ரன்களுடனும், கேன் வில்லியம்சன் 83 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஷிகர் தவன் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் ஹைதராபாத் அணி இந்தத் தொடரில் ஆறு தொடர்ச்சியான வெற்றிகளைப் பதிவு செய்தது. இந்தத் தோல்வியை அடுத்து டெல்லி அணி, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பிலிருந்து வெளியேறியது.