Sharapova humbled to the semi-final ...
ஸ்டட்கார்ட் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் மரியா ஷரபோவா அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
ஸ்டட்கார்ட் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் எஸ்டோனியாவின் ஆனெட் கோன்டாவெய்ட்டுடன், ரஷியாவின் ஷரபோவா மோதினார்.
இதில், ஷரபோவா, 6-3, 6-4 என்ற நேர் செட்கணக்கில் ஆனெட் கோன்டாவெய்ட்டை வீழ்த்தி வெற்றிப் பெற்றார்.
ஷரபோவா, இன்று நடைபெறவுள்ள அரையிறுதியில் பிரான்ஸின் கிறிஸ்டினா மெலாடெனோவிக்கை எதிர்கொள்கிறார்.
