Shanghai Masters Nadal Federer Del Bodro to progress to the quarter ...
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் மற்றும் அர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயினின் ரஃபேல் நடால், இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியுடன் மோதினார்.
இதில், 6-3, 6-1 என்ற நேர் செட்களில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியை தோற்கடித்தார் ரஃபேல் நடால்.
நடால் தனது காலிறுதியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை சந்திக்கிறார்.
அதேபோன்று, ரோஜர் ஃபெடரர் தனது காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் உக்ரைனின் அலெக்சாண்டர் டோல்கோ போலோவுடன் மோதினார்.
இதில், 6-4, 6-2 என்ற நேர் செட்களில் உக்ரைனின் அலெக்சாண்டர் டோல்கோ போலோவை தோற்கடித்தார் ரோஜர் ஃபெடரர்.
ஃபெடரர் அடுத்ததாக பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட்டை சந்திக்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார்.
இதில், 3-6, 7-6 (5), 6-4 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தினார் ஜுவான் மார்ட்டின்.
ஜுவான் மார்ட்டின் தனது காலிறுதியில் செர்பியாவின் விக்டர் டிராய்க்கியை சந்திக்கிறார்.
