shane warne praised indian skipper virat kohli

இலக்கை விரட்டுவதில் கோலி வல்லவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்திய அணி இரண்டாவது பேட்டிங்கின்போது, கோலி சதமடித்த 19 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 

கோலியின் பேட்டிங் திறமையை பல ஜாம்பவான்கள் புகழ்ந்து வருகின்றனர். சம காலத்தில் சிறந்த வீரராக கோலி திகழ்கிறார். இலக்கை விரட்டுவதில் கோலி சிறுத்தை போன்றவர் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் ஏற்கனவே புகழ்ந்திருந்தார்.

இந்நிலையில், தற்போது கோலியை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் மாயாஜால சுழற்பந்து வீச்சாளரும் ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளருமான ஷேன் வார்னே புகழ்ந்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஷேன் வார்னே, இரண்டாவது பேட்டிங் செய்து இலக்கை விரட்டும்போது கோலி அபாரமாக ஆடுகிறார். இரண்டாவது பேட்டிங்கில் எத்தனை சதங்கள்? இலக்கை விரட்டி வெற்றி காண்பதில் கோலி செய்த சாதனைகளை வேறு யாரும் செய்திருக்க முடியாது; சச்சின் கூட செய்ததில்லை. நான் ஆடிய காலத்தில் சச்சினும் லாராவும் சிறந்த பேட்ஸ்மேன்கள். அதேபோல் தற்போது கோலியும் டிவில்லியர்ஸும் சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்கிறார்கள் என ஷேன் வார்னே தெரிவித்தார்.