Shakib Alhsaan a leading allrounder got rest

வங்கதேச அணியில் இருந்த உலகின் முன்னணி ஆல்ரவுண்டரான ஷகிப் அல்ஹசனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள வங்கதேச அணியில் இருந்து உலகின் முன்னணி ஆல்ரவுண்டரான ஷகிப் அல்ஹசனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த அல்ஹசன், தனக்கு ஓய்வு தேவைப்படுவதாக தேர்வுக் குழுவினரிடம் தெரிவித்ததை அடுத்து அவருக்கு ஓய்வளிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவது உறுதி.

"இப்போதும் ஷகிப் அல்ஹசன் இல்லாத வங்கதேச அணியை நினைத்துப் பார்க்க முடியாது. எனினும் அவர் ஓய்வு தேவை என வேண்டுகோள் விடுத்ததால் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்று வங்கதேச தேர்வுக் குழு தலைவர் மின்ஹாஜுல் அபிதீன் தெரிவித்தார்.