கோவை,

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சீனியர் பிரிவில் உயரம் தாண்டுதலில் தேசிய சாதனையாக இருந்த 2.25 மீட்டர் உயரத்தை ஜூனியர் பிரிவில் 2.26 மீட்டர் தாண்டி புதிய சாதனைப் படைத்துள்ளார் தேஜஸ்வென் சங்கர்.

32–வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் வியாழக்கிழமை தொடங்கியது.

இதில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் டெல்லியை சேர்ந்த தேஜஸ்வின் சங்கர் 2.26 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றதுடன் புதிய தேசிய சாதனையும் படைத்தார்.

மேற்கு வங்காள வீரர் ஹரி ஷங்கர் ராய் 2004–ம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த ஆசிய ஆல்–ஸ்டார் தடகள போட்டியில் 2.25 மீட்டர் உயரம் தாண்டியதே இதற்கு முன்பு இந்திய வீரர் ஒருவரின் தேசிய சாதனையாக இருந்தது.

அந்த 12 ஆண்டு கால தேசிய சீனியர் சாதனையை இப்போது 17 வயதான ஜூனியர் வீரர் தேஜஸ்வின் முறியடித்து வியக்க வைத்திருக்கிறார்.

தேஜஸ்வின் ஏற்கனவே காமன்வெல்த் இளையோர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.