sehwag missed a record century and dhawan be the first indian

டெஸ்ட் போட்டியில் முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்பாக சதமடிப்பதை சாதனை என்று தெரியாமல் சேவாக், ஏற்கனவே ஒரு சந்தர்ப்பத்தை தவறவிட்டார். ஆனால், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக சதமடித்த தவான், இந்த சாதனையை செய்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தட்டி சென்றார்.

இந்தியா ஆஃப்கானிஸ்தான் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில், முதல் நால் உணவு இடைவேளைக்கு முன்னதாக தவான் சதமடித்து அசத்தினார். இதற்கு முன்னதாக இந்த சம்பவத்தை செய்தவர்கள், டிரம்பர், மெகார்ட்னி, டான் பிராட்மேன், மாஜித் கான், டேவிட் வார்னர் ஆகியோர் மட்டும்தான். அதனால் இந்த பட்டியலில் இணைந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தவான் பெற்றுள்ளார்.

ஆனால் இந்த வாய்ப்பு ஏற்கனவே சேவாக்கிற்கு கிடைத்தது. அது சாதனை என்பது தெரியாமல் சேவாக் அந்த வாய்ப்பை தவறவிட்டார். 2006ம் ஆண்டு செயிண்ட் லூசியாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக 75 பந்துகளுக்கே 99 ரன்கள் எடுத்துவிட்டார். அவர் 99 ரன்களில் இருந்தபோது, உணவு இடைவேளை வந்துவிட்டது. அப்படி சதமடிப்பது சாதனை என்பது தெரிந்திருந்தால், அன்றே அதை நிகழ்த்தியிருப்பார் சேவாக். 

இன்றைக்கு ஷிகர் தவான் 87 பந்துகளில் சதமடித்தார். ஆனால், வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான அந்த குறிப்பிட்ட போட்டியில் சேவாக், 75 பந்துகளுக்கே 99 ரன்கள் எடுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.