ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டி20 பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கோலி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் தற்போது 2-ஆவது இடத்தில் உள்ளார்.

முரளி விஜய் 24-ஆவது இடத்துக்கு ஏற்றம் கண்டுள்ளார்.

பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

ஜடேஜா 6-ஆவது இடத்தில் தொடர்கிறார்.

அதேபோல, ஆல்ரவுண்டர்கள் பட்டியலிலும் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

டெஸ்ட் அணி வரிசையில் இந்தியா 115 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது.