Second place for India bujara in ICC rankings

ஐசிசி தரவரிசையில் டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவின் புஜாரா இரண்டாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

கேப்டன் விராட் கோலி 5-ஆவது இடத்தில் உள்ளார்.

ஐசிசி தரவரிசையில் டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவின் புஜாரா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன்மூலம் புஜாரா 22 புள்ளிகள் பெற்றார்.

தற்போது, தரவரிசைப் பட்டியலில் புஜாரா 888 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் 941 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் உள்ளார்.

நாகபுரியில், இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் கேப்டன் கோலி இரட்டை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததார். ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 877 புள்ளிகளுடன் கோலி 5-வது இடத்திலேயே நீடிக்கிறார்.

ஐசிசி ஒரு நாள் மற்றும் டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கோலி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் முரளி விஜய் 8 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தையும், ரோஹித் சர்மா 7 இடங்கள் முன்னேறி 46-வது இடத்திலும் உள்ளனர்.

இந்தப் பட்டியலில், இங்கிலாந்தின் ஜோ ரூட் 881 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 880 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.

இந்தியாவின் கே.எல். ராகுல் ஓரிடம் கீழிறங்கி 9-வது இடத்திலும், ரஹானே 15-வது இடத்திலும் உள்ளனர்.

அதேபோன்று, ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் பட்டியலில், இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா 880 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 300 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை புரிந்த அஸ்வின் 849 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார் 28-வது இடத்திலும், இஷாந்த் சர்மா 30-வது இடத்திலும் உள்ளனர்.

இந்தப் பட்டியலில், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 891 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.