தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் 7-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரரான சரத் கமலுக்கு ரூ. 2.2 இலட்சம் பரிசு வழங்கப்பட்டது.

ஹரியாணா மாநிலம் மனேசரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் சரத் கமல் 11-8, 6-11, 11-9, 3-11, 11-8, 11-5 என்ற செட் கணக்கில் செளம்யஜித் கோஷை தோற்கடித்தார்.

மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் மதுரிகா 11-5, 11-9, 11-5, 12-10 என்ற நேர் செட்களில் 6 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றவரான பௌலமி கடக்கை தோற்கடித்தார்.

ஆடவர் இரட்டையர் இறுதிச்சுற்றில் செளம்யஜித் கோஷ்-ஜுபின் குமார் ஜோடி 11-3, 7-11, 11-6, 8-11, 11-5 என்ற செட் கணக்கில் சுஷ்மித் ஸ்ரீராம்-அனிருபன் கோஷ் ஜோடியை தோற்கடித்து சாம்பியன் ஆனது.

மகளிர் இரட்டையர் பிரிவில் அனின்திதா சக்ரவர்த்தி-சுத்ரிதா முகர்ஜி ஜோடி 11-8, 11-8, 4-11, 11-3 என்ற நேர் செட் கணக்கில் போலோமி கடக்-மெளதா தாஸ் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

கலப்பு இரட்டையர் பிரிவில் அர்ஜுன் கோஷ் - சுத்ரிதா முகர்ஜி ஜோடி 11-9, 11-5, 11-9 என்ற நேர் செட்களில் சனில் ஷெட்டி - பூஜா சஹஸ்ராபுதே ஜோடியை தோற்கடித்து சாம்பியன் ஆனது.

சரத் கமலுக்கு ரூ.2.2 இலட்சமும், மதுரிகாவுக்கு ரூ.1.2 இலட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.