மகளிர் இரட்டையர் டென்னிஸ் தரவரிசையில் தொடர்ந்து 2-ஆவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார் இந்தியாவின் சானியா மிர்ஸா.

டபிள்யூடிஏ பைனல்ஸ் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் வாய்ப்பை இழந்தபோதிலும், சானியாவின் தரவரிசையில் எந்த மாற்றமும் இல்லை.

சிங்கப்பூரில் நடைபெற்ற டபிள்யூடிஏ பைனல்ஸ் போட்டியின் அரையிறுதியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி, ரஷியாவின் எக்டெரினா மகரோவா-எலினா வெஸ்னினா ஜோடியிடம் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.

முதலிடத்தை தக்கவைத்தது குறித்துப் பேசிய சானியா, "மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து 2-ஆவது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்திருப்பது மிகப்பெரிய கௌரவமாகும்.

இந்த இரண்டு ஆண்டுகளிலும் எனது டென்னிஸ் பயணம் வியப்பான ஒன்றாக அமைந்துள்ளது' என்றார்.