MMA போட்டியில் வரலாற்று வெற்றி: பாகிஸ்தான் வீரரை 1.30 நிமிடங்களில் வீழ்த்தி சாதனை படைத்த சங்ராம் சிங்

இந்திய மல்யுத்த வீரர் சங்ராம் சிங், காமா சர்வதேச சண்டை சாம்பியன்ஷிப்பில் தனது முதல் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் MMA (கலப்பு தற்காப்புக் கலை) உலகில் முத்திரை பதித்தார்.

Sangram Singh becomes first Indian male wrestler to win MMA fight vel

காமன்வெல்த் ஹெவிவெயிட் மல்யுத்த சாம்பியனான சங்ராம், தன்னை விட பதினேழு வயது இளைய பாகிஸ்தான் வீரர் அலி ராசா நசீருக்கு எதிராக வெறும் 1 நிமிடம் முப்பது வினாடிகளில் வெற்றி பெற்று, கலப்பு மல்யுத்தப் போட்டியில் வென்ற முதல் இந்திய ஆண் மல்யுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

போட்டியிடும் பதினொரு நாடுகளில், 93 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் சங்ரம் சிங் அதிவேக வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். சங்ராம் தனது சமயோஜித புத்தி மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்தியதன் மூலம் தெளிவான வெற்றியைப் பெற்றார். அவர் பாரம்பரிய மல்யுத்தத்தின் பின்னணி மற்றும் பயிற்சியில் அர்ப்பணிப்பு கொண்டவர்.

Ind Vs Ban: தோல்விகளை விட அதிக வெற்றி: 92 ஆண்டு வரலாற்றை மாற்றி அமைத்த இந்திய அணி

இந்த வெற்றியை இந்தியாவுக்குக் கொண்டு வந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த வெற்றியானது இந்தியாவில் சிறந்த எதிர்காலத்தைக் கொண்ட எம்எம்ஏவின் திசையில் ஒரு படியாகும். இது தனிப்பட்ட சாதனைகளுக்கு அப்பாற்பட்டது. உலக அளவிலான அங்கீகாரம், கலப்பு தற்காப்புக் கலைகளை (MMA) ஆதரிக்கும் திட்டங்களைச் செயல்படுத்த இந்திய அரசாங்கத்தை ஊக்குவிக்கும் மற்றும் இந்த விளையாட்டைத் தொடர இளைஞர்களை ஊக்குவிக்கும் என்பது எனது நம்பிக்கை.

"இது ஏராளமான இளம் விளையாட்டு வீரர்களை தங்கள் உள் வலிமையைக் கண்டறியவும், மகத்துவத்திற்காக பாடுபடவும், கலப்பு தற்காப்புக் கலை உலகில் உள்ள தடைகளை கடக்கவும் ஊக்குவிக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை," என்று வெற்றிக்கு பின் சங்கராம் சிங் தெரிவித்துள்ளார்.

அடேங்கப்பா! தோனி மகளின் பள்ளி கட்டணம் இத்தனை லட்சமா?

மேலும் அவர் கூறுகையில், “எனது இந்திய பயிற்சியாளர் பூபேஷ் குமாரின் அசைக்க முடியாத வழிகாட்டுதலுக்கு என்னால் நன்றி சொல்ல முடியாது. ஒவ்வொரு அடியிலும் என்னுடன் இருந்திருக்கிறார். நான் கலப்பு தற்காப்புக் கலைகளுக்கு மாறிய முழு நேரத்திலும் என்னை ஆதரித்த மற்றும் எனது திறனை வளர்த்துக் கொள்ள உதவிய எனது சர்வதேச பயிற்சியாளர் டேவிட் ஐயாவுக்கும் நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்கள் என்னை ஆதரிக்கவில்லை என்றால் இந்த சண்டைக்கு நான் சிறப்பாக தயாராகி இருந்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios