மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டர் சாமுவேல்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்துவீச ஐசிசி அனுமதி அளித்ததை தொடந்து மார்ச்-ல் பந்துவீச உள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டர் சாமுவேல்ஸ் விதிமுறைக்கு புறம்பாக பந்து வீசுவதாகக் கூறி தடை விதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி சாமுவேல்ஸ் பந்துவீசும் முறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அவர் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து பந்துவீச அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

சாமுவேல்ஸ், கடைசியாக நவம்பர் 2016-ல் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினார். பிறகு ஜிம்பாப்வே-வில் நடைபெற்ற முத்தரப்பு போட்டியில் அவர் நீக்கப்பட்டார்.

மார்ச்-ல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. அதில் சாமுவேல்ஸ் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.