Asianet News TamilAsianet News Tamil

சின்னசாமி மைதானத்தில் சிக்ஸர் மழை!! கோலியை திகைக்க வைத்த சாம்சன்

samson amazing batting against rcb
samson amazing batting against rcb
Author
First Published Apr 15, 2018, 7:24 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp


பெங்களூரு ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கோலி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணி தொடக்க வீரர்களாக ரஹானேவும் ஷார்ட்டும் களமிறங்கினர். ஷார்ட் மந்தமாக ஆட, ரஹானே அடித்து ஆடினார். 36 ரன்கள் எடுத்து ரஹானேவும் வெறும் 11 ரன்களில் ஷார்ட்டும் அவுட்டாகினர்.

சஞ்சு சாம்சனும் பென் ஸ்டோக்ஸும் நிதானமாகவும் அதேநேரத்தில் அதிரடியாகவும் ஆடினர். அடித்து ஆடிய சாம்சன், 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதன்பிறகு உமேஷ் யாதவ், வோக்ஸ், கேஜ்ரோலியா ஆகியோரின் பந்துகளில் சிக்ஸர் மழை பொழிந்தார்.

36 பந்துகளில் அரைசதம் கடந்த  சாம்சன், 45 பந்துகளில் 92 ரன்களை குவித்தார். 10 சிக்ஸர்கள் விளாசினார். சாம்சனின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமலும் அவரது விக்கெட்டை வீழ்த்த முடியாமலும் கோலி திகைத்து நின்றார்.

சாம்சனின் அதிரடி ஆட்டத்தால், ராஜஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 217 ரன்களை குவித்தது.

218 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் மெக்கல்லம் தொடக்கத்திலேயே அவுட்டானார். கோலி அரைசதம் அடித்து அவுட்டானார். டி காக், டிவில்லியர்ஸ் ஆகியோரும் அவுட்டாக வாஷிங்டன் சுந்தரும் மந்தீப் சிங்கும் ஆடி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios