sam billings is the most notorious of csk said raina
சிஎஸ்கே ஓய்வறையில் கெட்ட பெயர் எடுத்தது யார் என சிஎஸ்கே வீரர் ரெய்னா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 11வது சீசனில் இரண்டு ஆண்டுகள் களமிறங்கிய சென்னை அணி, மூன்றாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது. சென்னை அணியின் செல்லப்பிள்ளைகளில் ஒருவரான ரெய்னா, கோப்பையை வென்றதற்கு பிறகு ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவரிடம் சென்னை அணி வீரர்கள் குறித்து நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றிற்கெல்லாம் ரெய்னா, ஒளிவுமறைவில்லாமல் நேரடியாக பதிலளித்தார்.
சிறந்த பேட்ஸ்மேன் தோனி, சிறந்த பவுலர் புவனேஷ்வர் குமார், ஓய்வறையில் நகைச்சுவையாக பேசுவது ஹர்பஜன் சிங், தாமதமாக வருவது வாட்சன், சிறந்த எண்டெர்டெயினர் பிராவோ என்றெல்லாம் கூறினார் ரெய்னா.
ஓய்வறையில் சர்ச்சைக்குரிய அல்லது அனைவரிடமும் வசைப்பெயர் எடுத்த வீரர் சாம் பில்லிங்ஸ் என தெரிவித்தார். இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் சென்னை அணியின் மிடில் ஆர்டரில் களமிறங்கி ஆடினார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு பில்லிங்ஸ் சோபிக்கவில்லை.
