Saina defeated semi final making up a quarter of the Indus
இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் காலிறுதியில் சாய்னாவை வீழ்த்தி அரையிறுதியில் கால் பதித்துள்ளார் பி.வி.சிந்து.
இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற காலிறுதி நடந்தது. விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் சிந்துவும், நேவாலும் கடுமையான வெற்றிக்காக போராடினர்.
இறுதியில் சிந்து 21-16, 22-20 என்ற நேர் செட்களில் சாய்னா நெவாலை வீழ்த்தினார்.
சிந்துவும், சாய்னாவும் இதுவரை இரு முறை மட்டுமே சர்வதேசப் போட்டிகளில் மோதியுள்ளனர். அதில் 2014-ல் நடைபெற்ற சையது மோதி பாட்மிண்டன் போட்டியில் சாய்னா, சிந்துவை வீழ்த்தினார்.
மூன்று வருடங்கள் கழித்து சிந்து அதற்கு சமன் செய்துள்ளார்.
வெற்றி குறித்துப் சிந்து பேசியது: "மொத்தத்தில் இது நல்லதொரு ஆட்டம். ஆரம்பத்தில் சாய்னா முன்னிலையில் இருந்தார். எப்போதுமே பின்னடைவில் இருந்தாலும், அதிலிருந்து மீள முடியும் என்ற தன்னம்பிக்கை எனக்குள் இருக்கிறது. அதனால் நான் விடாப்பிடியாக ஆடினேன். ஒரு கட்டத்தில் சாய்னா 20-19 என்ற கணக்கில் முன்னிலை இருந்தார். அப்போதும்கூட இந்த ஆட்டத்தில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது' என்று வெற்றி களிப்பில் பேசினார்.
மற்றொரு காலிறுதியில், தென் கொரியாவின் ஜி ஹியூன் 21-16, 22-20 என்ற நேர் செட்களில் நடப்பு சாம்பியனான தாய்லாந்தின் ரட்சனோக் இந்தனனை தோற்கடித்தார்.
சிந்து தனது அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் சங் ஜி ஹியூனை சந்திக்கிறார். இந்தப் போட்டியில் இருவரும் டஃப் கொடுப்பர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
