Asianet News TamilAsianet News Tamil

முதலில் இதை கற்றுக்கொள்ளுங்கள்.. ஆஸ்திரேலிய அணிக்கு மாஸ்டர் பிளாஸ்டரின் நெற்றியடி

sachin tweet about ball tampering
sachin tweet about ball tampering
Author
First Published Mar 29, 2018, 3:03 PM IST


வெற்றி பெறுவதை விட எப்படி வெற்றி பெற்றோம் என்பது மிகவும் முக்கியமானது என மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், அதற்கு உடந்தையாக இருந்த கேப்டன் ஸ்மித், ஐடியா கொடுத்த துணை கேப்டன் வார்னர் ஆகியோர் அவரவர் வகித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.

ஏற்கனவே களத்தில் ஆஸ்திரேலிய வீரர்களின் செயல்பாடுகள் விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், இந்த விவகாரம் பூதாகரமாகியது. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் நம்பகத்தன்மை மீதே சந்தேகத்தை எழுப்பியதால், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறிழைக்கப்படாத அளவிற்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் தண்டனை விதிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.

எனவே ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பந்தை சேதப்படுத்திய பான்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சச்சின் டுவீட் செய்துள்ளார். அதில், கிரிக்கெட் ஜெண்டில்மேன் விளையாட்டாக அறியப்படுகிறது. நியாயமான முறையில் விளையாடப்படும் விளையாட்டு என நம்புகிறேன். எதிர்பாராத விதமாக நடந்தது எதுவாக இருந்தாலும் கிரிக்கெட்டின் நேர்மையை நிலைநிறுத்தம் விதமாக சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெற்றி பெறுவதை விட எப்படி வெற்றி பெறுகிறோம் என்பதுதான் மிக முக்கியம் என சச்சின் பதிவிட்டுள்ளார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Cricket has been known as a gentleman&#39;s game. It&#39;s a game that I believe should be played in the purest form. Whatever has happened is unfortunate but the right decision has been taken to uphold the integrity of the game. Winning is important but the way you win is more important</p>&mdash; Sachin Tendulkar (@sachin_rt) <a href="https://twitter.com/sachin_rt/status/979021322226298880?ref_src=twsrc%5Etfw">March 28, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

Follow Us:
Download App:
  • android
  • ios