இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கரின் பிறந்தாநாளையொட்டி அவரது ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக சச்சினின் ஆவணப்படம் ஒளிபரப்ப படுகிறது.

உலகப் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கை பற்றிய ஆவணப் படம் வருகிற 23-ஆம் தேதி சோனி இ.எஸ்.பி.என் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடுகிறது.

சச்சினின் இந்த ஆவணப் படம், 1989 முதல் 2013 வரையிலான காலங்களில் சச்சின் ஆடிய முக்கிய ஆட்டங்கள், அவர் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக உருவானது, 2011 உலகக் கோப்பை வென்றது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகளை உள்ளடக்கியது.

ஏப்ரல் 24-ஆம் தேதி சச்சினின் 44-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 23-ஆம் தேதி மாலையில் அவருடைய ஆவணப் படம் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி ஆவணப் படத்தின் இயக்குநர் கெளதம் சோப்ரா கூறியது:

“இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், சச்சினின் ரசிகர்கள் ஆகியோருக்கு இந்த படம் மறக்க முடியாத நினைவாக இருக்கும். அவர்கள் இதை நிச்சயம் கொண்டாடுவார்கள். சச்சினோடு நேரத்தை செலவிட்டு உலகக் கோப்பையை வென்ற அனுபவத்தை அவரிடம் இருந்து கேட்டறியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி' என்று கூறினார்.