sachin tendulkar congrats virat kohli
களத்தில் இறங்கி சதங்களை விளாசுவதை கோலியின் வாடிக்கையாகிவிட்டது என மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-1 என இந்தியா முன்னிலை வகிக்கிறது. மூன்று ஒருநாள் போட்டிகளின் வெற்றிகளின் கேப்டன் கோலியின் பங்களிப்பு அளப்பரியது.
முதல் ஒருநாள் போட்டியில் 270 என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் கேப்டன் கோலி சதம் விளாசினார். கோலி-ரஹானேவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியில் வென்ற இந்திய அணி, நேற்று நடந்த மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் தனது 34வது ஒருநாள் சதத்தை கோலி பதிவு செய்தார். இந்த தொடரில் கோலியின் இரண்டாவது சதம் இது.

ஒவ்வொரு போட்டியிலும் சாதனைகளை குவித்துவரும் கோலி, நேற்று அடித்த சதத்தின் மூலம், கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.

ஒருநாள் அரங்கில் 34வது சதத்தை பதிவுசெய்த கோலிக்கு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான சச்சினின் டுவிட்டர் பதிவில், களத்தில் இறங்கி சதங்களை விளாசுவதை கோலி வாடிக்கையாக கொண்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 34வது சதத்தை அடித்ததற்கு பாராட்டுகள். இதேபோன்று தொடர்ந்து கோலி ரன்களை குவிக்க வாழ்த்துக்கள் என சச்சின் பதிவிட்டுள்ளார்.

Stepping out on the field and scoring centuries has become a regularity for @imVkohli. Congratulations on your 34th ODI ton! Keep the runs flowing always. #INDvsSA pic.twitter.com/4eyuMUpl12
— Sachin Tendulkar (@sachin_rt) February 7, 2018

சச்சினின் மிகப்பெரிய ரசிகரான கோலிக்கு, சச்சினின் பாராட்டு மேலும் உத்வேகத்தை கொடுத்துள்ளது என்றே கூறவேண்டும்.