Sachin praise for Virat Kohli



சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 34-வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். அவருக்கு சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார். 

கேப்டவுன் ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் அதி அற்புத 160 நாட் அவுட்டால் இந்தியா, தென்னாப்பிரிக்காவை சரணடைய செய்தது. 

இது தொடர்பாக சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில், மைதானத்தில் இறங்கி சதங்களை விளாசுவது கோலிக்கு வாடிக்கையாகிவிட்டது. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 34-வது சதம் அடித்ததற்கு பாராட்டுகள். இன்னும் அதிக ரன்களை குவிக்கவும் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.