russel sixer rain in chepak ground

கொல்கத்தா அணியின் ரஸல் ஆட்ட நேர இறுதி வரை அவுட் ஆகாமல் 88 ரன்கள் குவித்தார். அவர் பறக்க விட்ட சிக்சர்கள் மைதானத்தை சூடாக்கியது. கடைசி வரை நிலைத்து நின்று ரசல், 11 சிக்சர் 1 பவுண்டரி என மொத்தமாக 88 ரன்கள் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். கேகேஆர் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. 

சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் கொல்கத்தா வீரர் ரசல், ரவுண்டுகட்டி சிக்சராக பறக்கவிட 20 ஓவரில் அந்த அணி 6 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு கிறிஸ் 22 ரன்களும், நரேன் 12 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த உத்தப்பா 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரெய்னாவின் சூப்பர் ரன் அவுட்டில் வெளியேறினார்.

அடுத்து வந்த ரசல் சிக்சராக பறக்கவிட்டார். கடைவரை நிலைத்து நின்ற ரசல், 11 சிக்சர் 1 பவுண்டரி என மொத்தமாக 88 ரன்கள் அடித்து கைகொடுக்க, கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது.