Rs 2 crore was not enough Virat Kohli to upset
ஏ கிரேட் கிரிக்கெட் வீரர்களின் ஊதியமான ரூ.2 கோடி போதுமானதாக இல்லை என்று கிரிக்கெட் வீரர் கோலி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பந்த வீரர்களுக்காக ஊதிய தொகை ‘ஏ’, ‘பி’, ‘சி’ என்று கிரேடு வாரியாக முறையே ரூ.2 கோடி, ரூ.1 கோடி, ரூ.50 இலட்சம் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தால் உயர்த்தப்பட்டது.
டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் போட்டிகளுக்கான கட்டணமும் முறையே ரூ.15 இலட்சம், ரூ.7 இலட்சம், ரூ.3 இலட்சம் என்றும் அதிகரித்துள்ளது.
ஆனால், இந்த ஊதியம் போதுமான அளவில் இல்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அதிருப்தியில் இருப்பதாகவும் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என விருப்ப படுவதாகவும் கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய வீரர்களை விட அதிக ஊதியம் வழங்கப்படுவதாக தெரிய வந்ததுதான் விராட் கோலியின் அதிருப்திக்கு காரணம்.
