பிரபல டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் மேலும் ஒரு சாதனையைப் படைத்துள்ளதால் அவருக்கு பல தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிகின்றன..

பிரபல டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் (36) அதிக முறை ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டங்களை அதாவது 20 முறை வென்ற சாதனை புரிந்துள்ளார். 

மேலும, கடின தரையில் 87.6 சதவீதம் வெற்றி பெற்றது, அதிக வயதில் உலகின் முதல்நிலை வீரராக திகழ்ந்தது போன்ற சாதனைகளும் அவர் வசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..

அவரது பல சாதனைகள் முறியடிக்கப்படுமா என்ற நிலையில் அவர் மேலும் சாதனையை படைத்துள்ளார். 

அது என்னவென்றால் உலகின் முதல் நான்கு வீரர்களில் 700 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தை வகித்த ஏடிபி வீரர் என்ற சாதனைதான் அது. 

மேலும், 300 வாரங்கள் நம்பர் ஒன் வீரர், 500 வாரங்கள் இரண்டாம் நிலை, 600 வாரங்கள் மூன்றாம் நிலை வீரர் போன்ற பெருமைகளையும் இவர் பெற்றுள்ளார். 

கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஒபன் போட்டியில் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்த விம்பிள்டன் போட்டியில் பங்கேற்பதில் அவர் கவனம் செலுத்தி வருகிறாராம்..