மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரர், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி கனடாவின் மான்ட்ரியால் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் மற்றும் நெதர்லாந்தின் ராபின் ஹேஸி மோதினர்.

இதில், 6-3, 7-6 (5) என்ற நேர் செட்களில் ராபின் ஹேஸியைத் தோற்கடித்தார் ஃபெட்ரர்.

இதன்மூலம் மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் போட்டியில் 6-வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் வீரர் ரோஜர் ஃபெடரர் என்ற பெருமையைப் பெற்றார்.

மற்றொரு அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்சாண்டர், கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவுடன் மோதி 6-4, 7-5 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார்.

இறுதிச் சுற்றில் ரோஜர் ஃபெடரரும், அலெக்சாண்டர் ஸ்வெரேவும் மோதுகின்றனர்.