கராச்சி,

பாதுகாப்பு விசயத்தில் இயல்பு நிலை திரும்பும் வரை வெளிநாட்டு அணிகளை பாகிஸ்தானுக்கு அழைத்து ரிஸ்க் என்று பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் பேட்டி ஒன்று அளித்தார்,

அதில், “தற்போது பாகிஸ்தானில் நிலவி வரும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வெளிநாட்டு அணிகள் எதையும் பாகிஸ்தான் வந்து விளையாடும் படி அழைப்பு விடுக்கக்கூடாது.

பாதுகாப்பு விசயத்தில் இயல்பு நிலை திரும்பும் வரை வெளிநாட்டு அணிகளை பாகிஸ்தானுக்கு அழைத்து ரிஸ்க் எடுப்பது சரியாக இருக்காது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் பாகிஸ்தானில் நடைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால் அதற்கு சற்று காலம் பிடிக்கும்’ என்று தெரிவித்தார்.

குயட்டாவில் உள்ள காவல் பயிற்சி மையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து அக்தர் இந்த கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

2009–ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பாகிஸ்தானுக்கு விளையாட சென்ற இலங்கை கிரிக்கெட் அணியினர் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அதன் பின்னர் எல்லா முன்னணி கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருகிறது.

ஆனால் ஆப்கானிஸ்தான், கென்யா, ஜிம்பாப்வே போன்ற குட்டி அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.