retiring from international matches said Indian hockey player Raghunath
இந்திய வலைகோல் பந்தாட்ட வீரர் வி.ஆர்.ரகுநாத் இன்னும் சில மாதங்களில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்துள்ளார்.
கடந்தாண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் முக்கிய வீரர்களில் ஒருவராக ரகுநாத் திகழ்ந்தார்.
இவர் சென்னையில் நடைபெற்று வரும் எம்சிசி - முருகப்பா கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியில் பெங்களூரு ஹாக்கி அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது:
“அடுத்த சில மாதங்களில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது என முடிவெடுத்து உள்ளேன்.
தற்போதைய நிலையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக நினைக்கிறேன். அதனால் இந்திய அணிக்கு என்னுடைய சேவை தேவை என நினைக்கவில்லை.
நான் ஓய்வு பெற வேண்டும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் கூறவில்லை. ஆனாலும் இதுதான் நான் ஓய்வு பெறுவதற்கான தருணம் என்பது தெளிவாக தெரிகிறது.
நான் பக்குவப்பட்ட வீரராக இருப்பதால் சூழலைப் புரிந்துகொண்டு ஓய்வு பெற வேண்டும். அதற்கு நான் மனதளவில் தயாராகிவிட்டேன்” என்று கூறினார்.
