Red card to Messi In the next four games to ban dance

உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியின் அடுத்த நான்கு ஆட்டங்களில் விளையாட அர்ஜெண்டீனா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு ரெட் கார்டு கொடுத்து அதிரடி தடை விதித்தது ஃபிஃபா.

சிலி அணிக்கு எதிராக பியூனஸ் அயர்ஸில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தின்போது, கள நடுவரை தகாத வார்த்தைகளில் திட்டினார் மெஸ்ஸி.

மேலும், போட்டி நிறைவடைந்த பிறகு கள நடுவருக்கு கை கொடுக்காமல் அநாகரிகமாக நடந்து கொண்டு அவரை அவமதித்தார் மெஸ்ஸி.

மெஸ்ஸியின் இந்த செயலுக்காக அவர் அடுத்த நான்கு ஆட்டங்களில் விளையாட கூடாது என்ற நடவடிக்கையை ஃபிஃபா மேற்கொண்டது.

தனக்கு 'ஃபவுல்' கொடுத்த காரணத்திற்கா பிரேசில் நாட்டைச் சேர்ந்த அந்த கள நடுவருக்கு எதிரான மெஸ்ஸியின் நடவடிக்கையை, ரெட் கார்டு (சிவப்பு அட்டை) குற்றமாக குறிப்பிட்டு ஃபிஃபா இந்த தண்டனையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.