Real Madrid defeated Malaga by winning the championship
ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக கோப்பையை வென்றுள்ளது ரியல் மாட்ரிட்.
லா லிகா என்றழைக்கப்படும் ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டி ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி, மலாகா அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 2-ஆவது நிமிடத்தில் ரொனால்டோ கோலடிக்க, 55-ஆவது நிமிடத்தில் பென்ஸீமா கோலடித்தார். இதனால் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் பெற்றது.
இதன்மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் மலாகா அணியைத் தோற்கடித்து சாம்பியன் வென்றது ரியல் மாட்ரிட்.
இந்த வெற்றியின்மூலம் 23-ஆவது வெற்றியைப் பெற்ற மாட்ரிட் அணி 93 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
வெற்றி குறித்து மாட்ரிட் பயிற்சியாளர் ஜினெடின் ஜிடேன் பேசியது:
"எனது தொழில்முறை வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்த தினம் இது. இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக நடனம் ஆட விரும்புகிறேன். இந்த லீகில் சாம்பியன் பட்டம் வெல்வது மட்டுமே எங்களின் நோக்கமாக இருந்தது.
நீண்ட நாள்களாக பட்டம் வெல்லாததால் இந்த முறை பட்டம் வெல்வதில் தீவிரமாக இருந்தோம். ரொனால்டோ எப்போதுமே மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர்.
இந்த முறையும் அதேபோன்று ஆரம்பத்திலேயே கோலடித்து திருப்புமுனையை ஏற்படுத்தினார். அவருடைய ஆட்டத்தால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன்' என்றார்.
