Real Madrid at the final game - Liverpool football teams tomorrow clash ...

உக்ரைன் தலைநகர் கீவ்வில் நாளை நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் மற்றும் லிவர்பூல் அணிகள் மோதுகின்றன.

பிரபல கால்பந்து கிளப் அணிகள் மோதும் இப்போட்டி ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 

கடந்த 2016-ஆம் ஆண்டு போட்டியில் ரியல் மாட்ரிட் சாம்பியன் பட்டம் வென்றது. இந்தாண்டு அரையிறுதியில் பேயர்ன் முனிக் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் ரியல் மார்ரிட் அணி வென்றது. 

மற்றொரு அரையிறுதியில் ஏஎஸ் ரோமா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் எஃப்சி அணி வென்றது. 

இவ்விரு அணிகளும் இறுதிக்கு முன்னேறின. 1981-ஆம் ஆண்டுக்கு பின் லிவர்பூல் - ரியல் மாட்ரிட் அணிகள் முதன்முறையாக சாம்பியன்ஸ் லீக் இறுதியில் மோதுகின்றன. 

ரியல் மாட்ரிட் அணி 12 முறை பட்டம் வென்ற நிலையில் தற்போது ஹாட்ரிக் அடிக்க காத்துள்ளது. லிவர்பூல் அணியோ 6-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் உள்ளது.

ரியல் மாட்ரிட் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், லிவர்பூல் அணியில் முகமது சலாவும் நட்சத்திர வீரர்களாக திகழ்கின்றனர். 

ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக பிரபல வீரர் ஸினடேனும், லிவர்பூல் அணிக்கு ஜுர்கன் லாப்பும் செயல்படுகின்றனர்.