இந்திய விளையாட்டுத் துறையை புதிய உயரத்திற்கு புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ராத்தோர் எடுத்துச் செல்வார் என்று இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஜூலான் கோஸ்வாமி கூறினார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஜூலான் கோஸ்வாமி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், “ஒரு விளையாட்டு வீரராக அமைச்சர் ராத்தோர் அனைத்து தடங்கல்களையும் கடந்து வந்திருப்பார்.

எனவே, விளையாட்டு வீரர்கள் பதக்கம் வெல்வதில் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? அவர்களுக்கான தேவைகள் என்ன? என்பது அவருக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

ஆகையால், அடிப்படைக் கட்டமைப்புகளையும், ஏற்கெனவே இருக்கும் வசதிகளையும் மேம்படுத்தி, இந்திய விளையாட்டுத் துறையை புதிய உயரத்திற்கு அமைச்சர் ராத்தோர் எடுத்துச் செல்வார் என்று நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.