Asianet News TamilAsianet News Tamil

ரஷீத் கானை நிராகரித்த சேவாக், காம்பீர்!! 2 வருஷத்துக்கு பிறகு வெளிவந்த தகவல்

rashid khan rejected by 2 ipl teams before signed by srh
rashid khan rejected by 2 ipl teams before signed by srh
Author
First Published Jun 15, 2018, 11:29 AM IST


ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடிவரும் ரஷீத் கானை ஆரம்பத்தில் சேவாக் மற்றும் காம்பீர் ஆகியோர் புறக்கணித்ததாக ஆஃப்கானிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்பூட் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடிவருகிறார் ஆஃப்கானிஸ்தான் லெக் ஸ்பின்னர் ரஷீத் கான். இவர் பவுலிங் மட்டுமல்லாமல் தேவையான நேரங்களில் பேட்டிங்கும் சிறப்பாகவே ஆடுகிறார். நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணி, இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கு ரஷீத் கானும் முக்கியமான காரணம்.

19 வயதே ஆன ரஷீத் கான், இந்த இளம் வயதிலேயே சாதனைகளை குவித்துவருகிறார். ரஷீத் கானின் ஸ்பின் பவுலிங்கை கண்டு வியந்த சச்சின் டெண்டுல்கர், டி20 போட்டிகளில் ரஷீத் கான், உலத்தரம் வாய்ந்த ஸ்பின் பவுலர் என புகழாரம் சூட்டினார். ராகுல் டிராவிட்டும் ரஷீத் கானை பாராட்டினார்.

rashid khan rejected by 2 ipl teams before signed by srh

நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில், சமகால கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களான தோனி, கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 

ஐபிஎல்லில் மிரட்டிய ரஷீத் கானை தொடக்கத்தில் இரண்டு அணிகள் நிராகரித்துள்ளன. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆஃப்கானிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்பூட், நான் ஆஃப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளரான போது, ரஷீத் கானை அறிமுகப்படுத்தினேன். அவர் சிறப்பாக பந்துவீசினார். நல்ல வேகத்துடனும் வித்தியாசமான ஸ்டைலிலும் பந்துவீசினார்.

rashid khan rejected by 2 ipl teams before signed by srh

2016ம் ஆண்டில், பஞ்சாப் அணியின் ஆலோசகர் சேவாக்கிடம் ரஷீத் குறித்து கூறினேன். பஞ்சாப் அணியில் ஸ்பின்னர்கள் பெரிதாக இல்லையே..? ரஷீத்தை முயற்சி செய்து பார்க்கலாம் என்றேன். ஆனால் பஞ்சாப் அணியில் ஸ்பின்னராக அக்சர் படேல் இருக்கிறார் என்றும் ஆல்ரவுண்டர் தான் தேவை என்றும் சேவாக் கூறிவிட்டார்.

rashid khan rejected by 2 ipl teams before signed by srh

அதன்பிறகு கொல்கத்தா கேப்டன் காம்பீரிடம் ரஷீத் குறித்து கூறினேன். அவரும் சுனில் நரைன், குல்தீப் யாதவ் இருப்பதால், ரஷீத்தை நிராகரித்தார். 

பிறகு, ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் லக்‌ஷ்மணை தொடர்பு கொண்டு ரஷீத்தின் பவுலிங்கை பார்க்கும்படி கோரினேன். அவரும் ரஷீத் ஆடிய சில போட்டிகளை பார்த்து, பிறகு அணியில் எடுத்துக்கொண்டார் என லால்சந்த் ராஜ்பூட் தெரிவித்துள்ளார். 

2017லிருந்து கடந்த இரண்டு சீசன்களாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடிவருகிறார். இனிவரும் சீசன்களிலும் அந்த அணியால் அவர் தக்கவைக்கப்படுவது உறுதி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios